2024 தேர்தலில் போட்டியிட டோனிக்க விடுக்கப்பட அழைப்பு

    0
    21

    இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று மாலை அறிவித்தார். இதைத்தொடர்ந்து சக வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக பதிவிட்டார்.

    இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி, டோனி மக்களவைத் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவில், எம்.எஸ். டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், ஆனால் வேறு எதில் இருந்தும் அல்ல. அவரது திறமையால் முரண்பாடுகளுக்கு எதிராக போராட முடியும். கிரிக்கெட்டில் அவர் நிரூபித்த ஒரு அணியின் எழுச்சியூட்டும் தலைமை பொது வாழ்க்கையிலும் தேவை. அவர் 2024ம் நடைபெறவுள்ள மக்களவைத் பொதுத் தேர்தலில் போராட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.