29 வயது பெண்ணுக்கும், 80 வயது முதியவருக்கும் காதல் திருமணம்!

0
10
11 / 100

80 வயது முதியவர் ஒருவர் 29 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க நாட்டின் கேப்டவுன் நகரத்தில் வசிக்கும், டெர்சல் ராஸ்மஸ் (29) சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டே உள்ளூர் பத்திரிக்கையொன்றில் வேலை செய்துவருகிறார். அவர் கடந்த 2016ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் வில்சன் ராஸ்மஸ் (80) எனும் முதியவரை சந்தித்துள்ளார்.

பிறகு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து டெர்சலின் தாயிடம் காதல் விவகாரத்தை சொன்னார். அவர் கடும் கோபமடைந்தார். காரணம் பெண்ணின் தாயை விட 24 வருடங்கள் மூத்தவர் அந்த முதியவர்.

ஆனால் காதல் ஜோடி அவரின் சம்மத்ததை பெற்றனர். இதையடுத்து சமீபத்தில் டெர்சலும் வில்சனும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.

வில்சனின் 56 வயதான மூத்த மகள்தான் இருவரின் திருமணத்துக்கும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுள்ளார். தற்போது திருமணமான ஜோடி இருவரும் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.