3-வது முறையாக ஜோடி சேரும் சிம்பு – நயன்தாரா?

0
52
50 / 100

வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருந்த சிம்பு – நயன்தாரா, தற்போது மீண்டும் ஜோடி சேர உள்ளதாக கூறப்படுகிறது.

2020ம் ஆண்டு திரையுலகிற்கு மோசமான ஆண்டாக அமைந்தாலும், நடிகர் சிம்புவுக்கு இந்தாண்டு திருப்புமுனையாக அமைந்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை 30 கிலோ வரை குறைத்த சிம்பு, ஒரே மாதத்தில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார்.
தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். இவ்வாறு பிசியாக நடித்து வரும் சிம்பு, தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடமும் கதை கேட்டுள்ளாராம்.
இப்படத்தில் ஹீரோவை போன்று ஹீரோயின் கதாபாத்திரமும் படம் முழுக்க பயணிக்குமாம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவை படக்குழு அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இப்படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டால், இது சிம்புவுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படமாக அமையும். இவர்கள் இருவரும் ஏற்கனவே வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.