32 வயது பெண் அதிரடியாகக் கைது… காரணம் இதுதான்

0
16

கேகாலை சிறைச்சாலையில் சிறைக்கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதை பொருளை வழங்குவதற்கு முயற்சித்த பெண் ஒருவர் காவல் துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பெண்ணிடமிருந்து 6 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அவரின் வீட்டிலிருந்து 26 ஆயிரம் ரூபா பணம், மற்றும் 5 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

32 வயதுடைய கொட்டியாகும்புர பகுதியில் வசிக்கும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.