40 மில்லியன் ரூபா. சிறு உற்பத்தி முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் உணவு ஆணையாளர்.

0
4

கிழக்கு மாகாணத்தில் அரிசி உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.சீ.எம்.ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சிறு உற்பத்தி முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் உணவு ஆணையாளர் திணைக்களம் இந்த நிதியினை வழங்கியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சிறு போக அறுவடையின் போது பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட அரிசி உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் எம்.சீ.எம்.ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்ட அரசியல் பத்தி கூட்டுறவு சங்கத்திற்கு 12 மில்லியன் ரூபாவும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 13 மில்லியன் ரூபாவும், அம்பாறை மாவட்டத்திற்கு 13 மில்லியன் ரூபாவும், கந்தளாய் வான் எல விகங்க அரிசி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு இரண்டு மில்லியன் ரூபாவும் முதற்கட்டமாக வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிதியினை பயன்படுத்தி அரிசி ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளிடமிருந்து கட்டுப்பாட்டு விலைக்கு நெல்லை வாங்கி அதனை அரிசியாக்கி கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் எனவும், அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆறு மாதங்களின் பின்னர் பெற்றுக்கொண்ட கடனை இச்சங்கங்கள் அரசுக்கு முழுமையாக மீள செலுத்த வேண்டும் எனவும், அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.சி. எம்.ஷெரீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.