5 தமிழ் இளைஞர்கள் கைது . கனடாவில் பல்வேறு திருட்டு

0
4

கனடாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்து பணியாளர்களை அறைக்குள் கட்டி வைத்து விட்டு கொள்ளையில் ஈடுபடுவதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் கிங்ஸ்டன் வீதி, ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு பகுதியில் நடந்த மூன்று கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் டொரொன்டோ பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான ஐந்து பேரும் முகத்தை மறைத்துக் கொண்டு வர்த்தக நிலையங்களிற்கு சென்றுள்ளனர்.

தம்மிடம் வாள்கள் உள்ளது, முரண்டு பிடித்தால் வெட்டிச் சரித்து விடுவோம் என மிரட்டி, வர்த்தக நிலைய ஊழியர்களை களஞ்சிய அறைகளிற்குள் பலவந்தமாக அடைத்துள்ளனர். சில ஊழியர்களை கட்டி வைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

வர்த்தக நிலையங்களில் இருந்து கைத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு, வாகனமொன்றையும் திருடி, அதில் தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் பொலிஸ் புலனாய்வாளர்கள், டொராண்டோ போதைப்பொருள் மற்றும் பல பிரதேச முக்கிய குற்றப் பிரிவுகளின் உதவியுடன் ஐந்து சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

டொராண்டோவைச் சேர்ந்த லக்ஷ்மன் பத்மராஜா (25), ராகுலன் குமாரசலம் (24), லபீஷன் கலைவாணன் (21), சேரன் விக்னேஸ்வரன் (21), விட்பியைச் சேர்ந்த மதுசன் துரைராஜசிங்கம் (21) ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.