59 வயதில் சிறு வயது நடிகையை திருமணம் செய்துள்ள பிரபல நடிகர் ஷீன் பென்

0
27

ஹாலிவுட்டின் அமெரிக்க நடிகராகவும், இயக்குநராகவும், கதை திரைகதை, தயாரிப்பாளர் என பல பரிபாளங்களை கொண்டு பிரபலமானவர் நடிகர் ஷீன் பென்.

சமீபகாலமாக இவருக்கும் அந்தமாதிரியான காமெடி கலந்த படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை லைலா ஜார்ஜுடன் (28) கடந்த 4 வருடங்களாக காதலில் இருந்து வந்துள்ளனர் என்று செய்திகள் பரவின.

இதை உறுதிப்படுத்தும் வண்ணம் இருவரும் விழாக்களுக்கு சென்று முத்தம் கொடுத்து பரபரப்பையும் ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கொரானா லாக்டவுன் என்பதால் இரு பிள்ளைகள் லைலாவின் சகோதரரின் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.

ஷீன் பென் ஏற்கனவே இருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்று சினிமாவில் நடித்து வந்தார். தன்னுடைய மகள் டைலன் பென் (29)னைவிட ஒரு வயது சிறிய நடிகையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது ஹாலிவுட்டில் இந்த செய்திதான் கொரானாவைவிட பெரிதாக பேசப்பட்டு வருகிறதாம்.