விக்கியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்… வைரலாகும் போட்டோ…

0
295
61 / 100

லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் இருவரும் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டு அதை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட ஷூட்டிங் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் தர்பார் திரைப்படம் வெளியானது. தீபாவளி பண்டிகைக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நயன்தாரா அம்மனாக நடித்த மூக்குத்தி அம்மன் படம் வெளியானது. ஹீரோக்களுக்கு நிகராக பண்டிகை தினங்களில் படங்களை கொடுப்பதில் லேடி சூப்பர்ஸ்டாரை மிஞ்ச யாருமில்லை.

அதே போல எந்தவொரு பண்டிகை ஆனாலும், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் செம ஜாலியாக கொண்டாடி வருகிறார் நடிகை நயன்தாரா. விநாயகர் சதுர்த்தி, ஓணம், தீபாவளி என இந்து பண்டிகையையும், கிறிஸ்துமஸ், நியூ இயர் உள்ளிட்ட கிறிஸ்துவ பண்டிகையையும் காதலருடன் ஜாலியாக கொண்டாடி வருகிறார் நயன்தாரா.

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக, கடந்த டிசம்பர் 14ம் தேதி ஹைதராபாத் சென்ற நடிகை நயன்தாராவின் போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. கொரோனா காரணமாக அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு நடிகர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், முன்னதாகவே நயன்தாரா சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தாவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கிற்காக, தனது அண்ணாத்த ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நயன்தாரா படக்குழுவினருடன் டீம் டின்னர் சாப்பிட்ட போட்டோ சமீபத்தில் இணையத்தில் பரவி வைரலானது.

இந்நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காதலர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போல்கா டாட் போட்ட சின்ன ஸ்கர்ட் அணிந்து கொண்டு செம ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்துள்ள நயன்தாராவுக்கு ரசிகர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

மூக்குத்தி அம்மனாக நடித்த நிலையில், அடுத்ததாக வீரப் பெண்மணி வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை திருட்டுப்பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாளத்தில் ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக பாட்டு படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.