அச்சுவேலி பொதுச்சந்தை கொத்தணி ஆபத்து இல்லை!

0
9
11 / 100

அச்சுவேலி பொதுச்சந்தை வியாபாரிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 33 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அச்சுவேலி பொதுச் சந்தையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் நால்வரும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் அச்சுவேலி பொதுச் சந்தையில் வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என 33 பேரின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. இதில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.