இலங்கையில் தற்போது 3600 பேருக்கு HIV தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவிப்பு…

0
9
11 / 100

இலங்கையில் தற்போது 3600-க்கும் மேற்பட்டோர் HIV தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 1600-க்கும் மேற்பட்டோர் தமக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அறியாதிருந்ததாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 44 சிகிச்சை நிலையங்கள் காணப்படும் நிலையில், அவற்றில் சுமார் 2000 பேர் வரை சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஏனையோர் சிகிச்சை நிலையங்களுக்கு வருகை தருவதில்லை எனவும் அவர்கள் தமக்கு HIV தொற்று இருப்பது குறித்து அறியாமல் உள்ளதாகவும் தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளானோர் தமது ஆரோக்கிய வாழ்க்கையை கருத்திற்கொண்டு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.