கே.ஜி.எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

0
10
51 / 100

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

கே.ஜி.எஃப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் யாஷ். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எஃப் 2 உருவாகி வருகிறது. நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் பல பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் ஜூலை 16 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.