பையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்கள்

0
11
11 / 100

தனது சகோதரி கடந்த 28ஆம் திகதி சிவனொளிபாதமலைக்கு செல்வதாக கூறி விட்டே வீட்டிலிருந்து சென்றதாக கொழும்பில் பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த அரசியல் பிரமுகரான பிரபாத் ஜயவர்தனவே குறித்த பெண்ணின் சகோதரர் என தெரியவருகிறது.

இந்த நிலையில் அவர் தனது சகோதரி குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“எனது சகோதரி கடந்த 28ஆம் திகதி சிவனொளிபாதமலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். போகும் வழியில் சத்திரங்களில் வௌ்ளையடிக்க இருப்பதாக சகோதரி தெரிவித்தார்.

அத்துடன் அன்னதானம் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறினார். 28ஆம் திகதி நான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தான் எரன்த பிரதேசத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஹங்வெல்ல பொலிஸாரிடமிருந்து அழைப்பு வந்த நிலையில் அவர்கள் எனது சகோதரி தொடர்பாக விசாரித்தனர்.

அதேநேரம் எனது சகோதரியின் பை ஹங்வெல்ல பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 2017ஆம் ஆண்டு இளைஞர் படையணிக்காக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையில் காணப்பட்ட தகவல்களின் ஊடாகவே பொலிஸார் என்னை தொடர்பு கொண்டிருந்தனர்.

இந்த பை மற்றும் ஏனைய விடயங்கள் எனது தங்கையினுடையது என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்காக கொழும்பிற்கு வருகின்றேன். அத்துடன் எனது தங்கை 1991 இல் பிறந்தவர்.

அவருக்கு இன்னமும் 30 வயது கூட பூர்த்தியாகவில்லை. எனது சகோதரிக்கும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.