முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன

0
10
12 / 100

யாழ்.பல்கலைக்கழகத்தில் மீள நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த எட்டாம் திகதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்புப் போராட்டத்தை முன்டுத்திருந்தனர். அத்துடன், சில மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு உலகின் பல இடங்களில் இருந்தும் ஆதரவு பெருகியதால் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபி அமைப்பற்கு மாணவர்களின் பங்குபற்றலோடு துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராசாவினால் கடந்த 11ஆம் திகதி அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று அத்திவார போடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.