யாழ்.போதனா வைத்தியசாலையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
2
11 / 100

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை கைதிகள் 4 பேருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 431 பேருக்கு இன்றைய தினம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் 5 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் மரண சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு தொற்று உறுதியான அயலில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை ,வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது.