வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் குடும்பத் தலைவர் சடலம்…

0
16
50 / 100

வவுனியா, தரணிக்குளம் பகுதியில், தலையில் காயங்களுடன், குடும்பத் தலைவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில், இன்று அதிகாலை சடலமொன்று கிடப்பதாக, அவ்வழியே சென்றவர்கள், பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டார் என்றும் பிரேத பரிசோதனைகளுக்காக, சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கபபட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.