ஸ்ரீ 1, வாகனஇலக்கத்தகடு யாருடையது ?

0
5
11 / 100

எஸ்.ஜே. பிரசாத்

“1 ஸ்ரீ 1” வாகன இலக்கத்தகட்டை கொண்ட அந்தக் காரின் சொந்தக்காரர் இலங்கையின் முன்னாள் பிரதமர்மறைந்த சேர் ஜோன் கொத்தலாவல. பழைமைக்கு எப்போதும் மவுசு உண்டு. இதில் முக்கியமாக முதன் முதலாகஎன்று வரும் அனைத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

சேர் ஜோன் கொத்தலாவால 1956 இல் “டக்கர்ஸ் ஒட்டோடோம்”என்ற நிறுவனத்திலிருந்து காடிலாக் காரை (Cadillac) 17,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் இயக்குனர் சிரில் கார்டனர், கோல்ட்பேஸ் ஹோட்டலில்வைத்து இந்தக் காரை ‍சேர் ஜோன் கொத்தலாவலவிடம் வழங்கியுள்ளார்.

இந்த கார் தோற்றத்திற்கு மட்டுமல்ல இதன் உள் அம்சங்களாலும் மிகவும்பெறுமதி வாய்ந்ததாக பார்க்கப்பட்டுள்ளது. 1956 காடிலாக் டிவில்லி பொதுவாக நான்கு சிலிண்டர் வாகனம் என்றாலும்,இந்த குறிப்பிட்ட காரில் 8 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும், இது வழக்கமானடிவில்லின் சக்தியை இரட்டிப்பாக்குகிறது. தானியங்கி கியர் பொக்ஸ் மற்றும் பவர் ஸ்டீயரிங்போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

இந்த வாகனத்தை ஓட்டுவது ஒரு முழுமையான விருந்தாக அப்போது இருந்திருக்கும். இந்த காரில் ரேடியோ தொலைபேசி போன்ற சில கூடுதல் செயல்பாடுகளும்இருந்தன. இந்த காரின் தொழில்நுட்பம் அதன் காலத்திற்கு அப்பாற்பட்டது. இந்த கார் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உருவாக்கப்பட்டது. ஏனெனில்இந்த கார் எந்த எரிபொருளையும் அல்லது எரிவாயுவையும் வெளிப்புற சூழலில் செலுத்தாது.

மறைந்த பிரதமர் இந்த காரை அவர் இறக்கும் வரை சொந்தமாக வைத்திருந்தார். பின்னர் அதை விஸ்வ வீரசூரியர் என்பவர் வாங்கியள்ளார். வீரசூரியர்பின்னர் 1994 ஆம் ஆண்டு ‍சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக அருங்காட்சியகத்திற்கு இந்தகாரை பரிசாக வழங்கியதாக சொல்லப்படுகின்றது.

அங்கு அது தற்போது பெருமையுடன் நின்றுகொண்டி ருக்கிறது. ஒரு கிரீம் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ள இந்தக் காரின் மகத்துவம்முதல் பார்வையில் தெரிந்துவிடும். ஆனால் இந்தக் காரைப் பார்க்கும் ஒவ்வொருவருடைய கண்களும் தானாகவேஅந்த புகழ்பெற்ற இலக்கத் தகடுகளை நோக்கியே திரும்பும்.

எட்டு சிலிண்டர் கொண்ட கார் அரை நூற்றாண்டுக்கு முன்பு ஒரு அதிசயமாகஇருந்தது. பெரும்பாலான கார்கள் மூன்று அல்லது நான்கு சிலிண்டர்களாக மட்டுமே இருந்தன.1 ஸ்ரீ 1, பரந்த இருக்கைகளைக் கொண்ட இன்றைய வாகனங்களை விட மிகப் பெரியதாகத் தோன்றுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக பின் இருக்கை சிறிது கால்இடத்தை விட்டுச் ‍செல்கின்றது.

இடது பக்க ஸ்டீயரிங் ஒரு பழைய வானொலிக்கு அருகில் உள்ளது. பக்கவாட்டுகண்ணாடிகளை கூட உள்ளே இருந்து சரிசெய்யலாம், பெரும்பாலான கார்களில் இன்றும் அந்த வசதிஇல்லை. காடிலாக் மற்றும் பியூக்ஸ் ஆகியவை அரசாங்க சேவை சுற்றுப்பயணங்கள்மற்றும் எலிசபெத் மகா ராணியின் இலங்கை வருகையின் போது பயன்படுத்தப்பட்டது.

இந்த கார்களில் சில எங்கே என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளைஇந்த கார்கள் பழைய உலோகத்துடன் சேர்த்து வைக்கப்பட்டிருக்கலாம். அப்பல்லோ 12 விண்வெளி வீரர்களான கப்டன் சார்லஸ் கோன்ராட் ஜூனியர்,கப்டன் ரிச்சர்ட் எப்.கோர்டன் ஜூனியர், கப்டன் அலன் எல். பீன் ஆகியோர் 1970 மார்ச்13 முதல் 14 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டனர். இரண்டு முன்னணி கார்கள்போபி அர்னால்டாவால் பெறப்பட்டது. போபி அர்னால்டாஅந்தக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் சிறந்து விளங்கியவராவார்.

போபி அர்னால்டா கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மூன்றுஅப்பல்லோ 12 விண்வெளி வீரர்களை தனது காடில்லாக்கில் காலி முகத்திடலுக்கு அழைத்தவந்தார். அர்னால்டாவின் நிகழ்ச்சி நிரலின் நகல் 3 விண்வெளிவீரர்களால் கையொப்பமிடப்பட்டது.

போபி அர்னால்டாவின் காடிலாக் பின்னர் விற்கப்பட்டதும் அதன்புதிய உரிமையாளர் பழுதுக்காக இயந்திரத்தை அகற்றினார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.துரதிர்ஷ்டவசமாக இறுதியில் சில பாகங்கள் காணாமல் போனதால் அதை மீண்டும் பொருத்த முடியவில்லை.தற்போதைய நிலை மற்றும் இந்த காரின் உரிமை பற்றி எந்த தகவலும் இல்லை.